/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்னாள் படைவீரர்களுக்கு கோயில் பாதுகாப்பு பணி
/
முன்னாள் படைவீரர்களுக்கு கோயில் பாதுகாப்பு பணி
ADDED : மார் 27, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் உள்ள கோயில்களில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கென 77 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளன. இக்கோயில்களில் பணிபுரிய விரும்பும் 62 வயதிற்குட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களது படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பயன்பெறலாம், என்றார்.