/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயிர்களை காப்பாற்ற ரோட்டோரங்களில் கூடாரம்: பரிதவிப்பில் விவசாயிகள்
/
பயிர்களை காப்பாற்ற ரோட்டோரங்களில் கூடாரம்: பரிதவிப்பில் விவசாயிகள்
பயிர்களை காப்பாற்ற ரோட்டோரங்களில் கூடாரம்: பரிதவிப்பில் விவசாயிகள்
பயிர்களை காப்பாற்ற ரோட்டோரங்களில் கூடாரம்: பரிதவிப்பில் விவசாயிகள்
ADDED : நவ 22, 2024 04:17 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மாடுகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் ரோட்டோரங்களில் கூடாரம் அமைத்து இரவு பகலாக காவல் காக்கின்றனர்.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, பிரான்மலை, ஒடுவன்பட்டி, காளாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் காட்டு மாடு, கோயில் மாடுகள் இரவு நேரங்களில் வயல்களுக்குள் இறங்கி பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது.
விவசாயிகள் இரவில் வீடுகளுக்கு செல்லாமல் ரோட்டோரத்தில் கூடாரம் அமைத்து காவல் காத்து வருகின்றனர். கொட்டும் பனி, கடும் மழையாக இருந்தாலும் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலையில் துாக்கமின்றி ஆபத்தான முறையில் பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். மாடுகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற நிரந்தர ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வலியுறுத்தி உள்ளனர்.