தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தாய் மாமன் திட்டம்:1500 மோதிரம் தயார் 

தாய் மாமன் திட்டம்:1500 மோதிரம் தயார் 

தாய் மாமன் திட்டம்:1500 மோதிரம் தயார் 


UPDATED : செப் 23, 2026 04:10 PM

ADDED : செப் 23, 2026 01:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 04:10 PM ADDED : செப் 23, 2026 01:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:தமிழக அரசின் தாய்மாமன் திட்டத்தில் பிறக்கும் குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்குவதற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பாதுகாப்பு அறையில் 1500 தங்க மோதிரம் இருப்பு வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழக மருத்துவ சேவைகள் கழகம் சார்பாக ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் வரும் செப்.28ல் துவங்குகிறது. இத்திட்டத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தங்க மோதிரங்களை இருப்பு வைப்பதற்காக அனைத்து அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பெட்டகத்தில் தற்போது 1500 தங்க மோதிரங்கள் இருப்பு உள்ளது. 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us