/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரான்மலையில் தைப்பூச தீர்த்தவாரி
/
பிரான்மலையில் தைப்பூச தீர்த்தவாரி
ADDED : பிப் 12, 2025 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி பிரான்மலையில் தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.
மங்கைபாகர் தேனம்மை கோயிலில் முருகனுக்கு காலை 9:00 மணிக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு பாலாற்றில் முருகர், விநாயகர் சப்பரங்களில் புறப்பட்டு சென்றனர். மாலை 4:30 மணிக்கு மேலப்பட்டி அருகே பாலாற்றில் தீர்த்தவாரி நடந்தது.
உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் தீர்த்தவாரியை நடத்தினர். அரளிப்பாறை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், உலகம்பட்டி ஞானியார் மடம் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

