/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் கோயில் விழா இன்று இரவு கொடியேற்றம்
/
தாயமங்கலம் கோயில் விழா இன்று இரவு கொடியேற்றம்
ADDED : மார் 29, 2025 06:17 AM
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழாவிற்காக மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, இளையான்குடி பரமக்குடி, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று இரவு 10:20 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
முக்கிய விழாவான பொங்கல் விழா ஏப்.5ம் தேதி, மின் அலங்கார தேர்பவனி 6ம் தேதி, 7ம் தேதி பால்குடம், ஊஞ்சல் உற்ஸவம், பூப்பல்லக்கு, 8ம் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.