/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
100 நாள் வேலை திட்டத்தால் அரிதாகிப்போன குலவை நாற்றுகள்
/
100 நாள் வேலை திட்டத்தால் அரிதாகிப்போன குலவை நாற்றுகள்
100 நாள் வேலை திட்டத்தால் அரிதாகிப்போன குலவை நாற்றுகள்
100 நாள் வேலை திட்டத்தால் அரிதாகிப்போன குலவை நாற்றுகள்
ADDED : அக் 23, 2025 03:33 AM

சிங்கம்புணரி: தமிழகத்தில் நுாறு நாள் வேலைத்திட்டம் காரணமாக விவசாயத்தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் சாலைகளில் குலவை நாற்றுகளை காண்பது அரிதாகிவிட்டது.
கோடையில் காய்ந்த நிலத்தை வரப்பு வெட்டி, உழுது, விதை பாவி, நடவு செய்வதிலிருந்து அறுவடை வரை விவசாய தொழிலாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. 100 நாள் வேலை திட்டம் காரணமாக விவசாய தொழிலாளர் எண்ணிக்கை குறைந்தாலும் இன்னும் சிலர் விவசாயத்திற்கு சேவை செய்து கூலி பெற்று வருகின்றனர். கூலியாட்கள் கிடைக்காத நிலையில் நிலத்தின் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக ஒவ்வொரு வயலாக நடவு, அறுவடைப்பணிகளை மேற்கொள்கின்றனர்.
விவசாயப் பணியின் துவக்கத்தின் போது ஈசான மூலையில் வழிபாடு நடத்தி நாற்று நடும் பணியை தொடங்குவர்.
அப்போது தொழிலாளர்கள் நாற்று முடி ஒன்றை பாதையில் துண்டை விரித்து வைத்து விடுவர். அவ்வழியாகச் செல்பவர்கள் அந்நாற்று முடியை வணங்கி காணிக்கையிட்டு செல்வது வழக்கம். காணிக்கை செலுத்துவோருக்கு நன்றி கூறும் விதமாக பெண் தொழிலாளர்கள் அனைவரும் குலவை இடுவர். நாற்று முடிக்கு செலுத்தப்படும் காணிக்கை இயற்கையின் சொரூபமான இறைவனுக்கு செலுத்தப்படும் காணிக்கையாகவே கருதப்படுகிறது.
நடவுப் பணி முடிந்ததும் சேர்ந்த காணிக்கை பணத்தை தொழிலாளர்கள் சமமாக பிரித்துக் கொள்வர். விவசாயப் பணிகளில் அறிவியல் தொழில்நுட்பம், நாகரிகம் வளர்ந்தாலும் இன்னும் பாரம்பரியமான கலாசார பழக்க வழக்கங்கள் தொடர்வது நமது தேசத்தின் பெருமையை காட்டுகிறது.