/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குண்டும் குழியுமான ஒய்யவந்தான் ரோடு
/
குண்டும் குழியுமான ஒய்யவந்தான் ரோடு
ADDED : ஜன 31, 2026 05:40 AM

சிவகங்கை,சிவகங்கை அருகே ஒய்யவந்தானுக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஒய்யவந்தானுக்கு நாட்டரசன் கோட்டை அருகே தொண்டி ரோட்டில் இருந்து தார் சாலை செல்கிறது. இந்த சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி தான் சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பகுதியில் இருந்து செல்லக்கூடியவர்கள் விசயமாணிக்கம், ராணியூர், உடவயல், சாத்தனி, கிளுவச்சி, ஒய்யவந்தான், பேச்சாத்தகுடி, வெட்டிக்குளம், எட்டியேந்தல் வழியாக சாத்தரசன்கோட்டை, மறவமங்களம் உள்ளிட்ட பகுதிக்கு செல்ல வேண்டும்.
இந்த பகுதி மக்கள் மினி பஸ்சிலும், டூவீலரில் சேதமடைந்துள்ள குண்டும் குழியுமான சாலையில் தான் சென்று வருகின்றனர். சில நாட்களாக பெய்த மழையில் பள்ளங்களில் தண்ணீர் கிடப்பதால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் கிக்குகின்றனர். அவசரங்காலங்களில் ஆம்புலன்ஸ் கூட வேகமாக செல்லமுடியாத சூழல் உள்ளது. எனவே இந்த பகுதி மக்களின் நலன்கருதி மாவட்ட நிர்வாகம் சேதம் அடைந்துள்ள இந்த ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

