நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் குளங்கரை காத்த கூத்த அய்யனார் கோயிலில் இன்று நடைபெறும் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நேற்று கிராமத்தினர் புரவிகளை புரவிப்பொட்டலில் சேர்த்தனர்.
செட்டியதெரு ராமர் மடத்தில் திருப்புத்துார்,தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமத்தினர் கூடி தம்பிபட்டிக்கு சென்று சாமியாடியை மடத்திற்கு அழைத்து வந்தனர். மூன்று கிராமத்தினரும் புதுப்பட்டியில் புரவிகளுக்கு மரியாதை செய்தனர்.
பின்னர் அரண்மனைக்குதிரை,3 கிராமங்களுக்கான குதிரைகள், காளை, வேண்டுதலுக்கான குதிரைகளுடன் ஊர்வலமாக வந்து சீதளி கீழ்கரை புரவிப் பொட்டலில் சேர்த்தனர். இன்று மாலை கிராமத்தினர் புரவிகளை ஊர்வலமாக எடுத்து செல்கின்றனர்.