/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பன்னிரு திருமுறை முற்றோதல் நிறைவு விழா
/
பன்னிரு திருமுறை முற்றோதல் நிறைவு விழா
ADDED : டிச 01, 2025 06:42 AM
இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ஒன்றரை ஆண்டுகளாக பாடிய பன்னிரு திருமுறை முற்றோதல் நிறைவு விழா நடை பெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோயிலில் மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் சார்பில் கடந்த ஒன்றரை ஆண்டாக வாரந்தோறும் வியாழன், வெள்ளி அன்று திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் திருமூலர், சேக்கிழார் இயற்றிய 18,303 பன்னிரு திருமுறை பாடல்களை பாடி வந்தனர்.
இதற்கான நிறைவு விழாவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவில் ''சாற்றும் மெய்ப்பொருளாம் திருமுறை என்னும் தலைப்பில் ஜானகி ராமன் பேசினார். இதில் சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

