/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வழியில் இறக்கி விட்ட கண்டக்டர்: நீண்ட துாரம் நடந்த மாணவர்கள்
/
வழியில் இறக்கி விட்ட கண்டக்டர்: நீண்ட துாரம் நடந்த மாணவர்கள்
வழியில் இறக்கி விட்ட கண்டக்டர்: நீண்ட துாரம் நடந்த மாணவர்கள்
வழியில் இறக்கி விட்ட கண்டக்டர்: நீண்ட துாரம் நடந்த மாணவர்கள்
UPDATED : டிச 13, 2025 08:09 AM
ADDED : டிச 13, 2025 05:31 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே அரிமண்டபத்திற்கு சென்ற அரசு டவுன் பஸ்சை வழியில் நிறுத்தி பள்ளி மாணவர்கள், கிராம மக்களை இறக்கி விட்டதால் நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மாலை 5:00மணிக்கு அரிமண்டபத்திற்கு அரசு டவுன் பஸ் கிளம்பியது. தீயனுார் அருகே வந்த போது ரோட்டில் பொக்லைன் இயந்திரத்தை ஒரு லாரியில் ஏற்றி கொண்டிருந்ததால் தொடர்ந்து ரோட்டில் பஸ் செல்ல முடியாது என கூறி டிரைவர்,கண்டக்டர் பஸ்சில் இருந்த மாணவர்கள் மற்றும் கிராம மக்களை அங்கேயே இறக்கிவிட்டு திரும்பினர். கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அரிமண்டபத்திற்கு நடந்தே சென்றனர்.
அக்கிராம மக்கள் கூறியதாவது: அரிமண்டபம் கிராமத்திற்கு தினமும் மாலை வரும் டவுன் பஸ் ஒழுங்காக வருவது கிடையாது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் புறப்படவில்லை. பயணிகள் கேட்டபோது டயர் பஞ்சராக உள்ளதால் பஸ் வராது என கூறிவிட்டனர்.
போக்குவரத்து கழக அதிகாரிகள் தினமும் அரிமண்டபம் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

