/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ்சில் முதியவர் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த கண்டக்டர்
/
பஸ்சில் முதியவர் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த கண்டக்டர்
பஸ்சில் முதியவர் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த கண்டக்டர்
பஸ்சில் முதியவர் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த கண்டக்டர்
ADDED : நவ 12, 2024 05:13 AM

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பஸ்சில் முதியவர் தவறவிட்ட பணத்தை கண்டக்டர் எடுத்து பத்திரப்படுத்தி முதியவரிடம் ஒப்படைத்தார்.
திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் தெற்குப்பட்டைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்75. இவர் நேற்று கீழவளவிலுள்ள சகோதரி வீட்டுக்கு சென்று மருத்துவச் செலவிற்கு ரூ 20 ஆயிரம் வாங்கி கொண்டு திருப்புத்தூருக்கு மதுரை- - தஞ்சாவூர் அரசு பஸ்சில் திரும்பியுள்ளார். மதியம் 1:00 மணிக்கு திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி கழிப்பறை சென்றார். அப்போது பஸ்சில் பணம் வைத்திருந்த பையை தவற விட்டது நினைவுக்கு வந்து பஸ்சை பார்க்க சென்றார். ஆனால் பஸ் தஞ்சாவூர் சென்று விட்டது. இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக டைம் கீப்பர் மற்றும் திருப்புத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ராஜமாணிக்கம் தகவல் அளித்தார்.
போலீசார் துரிதமாக செயல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனையை தொடர்பு கொண்டனர். பணிமனை ஊழியர்கள் கண்டக்டர் நடராஜனை தொடர்பு கொண்டனர். அவர் பணம் இருந்த பையை எடுத்து பத்திரமாக வைத்திருப்பதாக கூறினார்.
பஸ் மீண்டும் நேற்று இரவு 7:00 மணிக்கு திருப்புத்தூர் வந்த போது போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், எஸ்.ஐ.செல்வபிரபு, போக்குவரத்து மேலாளர் சுரேஷ் முன்னிலையில் நடராஜன் பணத்தையும், ஏ.டி.எம்., கார்டு, வங்கி புத்தகம் ஆகியவற்றை ராஜமாணிக்கத்திடம் ஒப்படைத்தார். 18 ஆண்டுகளாக அரசு போக்குவரத்தில் பணிபுரியும் நடராஜன் விருதுநகர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்தவர். போலீசார் நடராஜனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.