/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மறைந்து வரும் மங்கல ஊருணி கேள்விக்குறியாகும் நீர்மட்டம்
/
மறைந்து வரும் மங்கல ஊருணி கேள்விக்குறியாகும் நீர்மட்டம்
மறைந்து வரும் மங்கல ஊருணி கேள்விக்குறியாகும் நீர்மட்டம்
மறைந்து வரும் மங்கல ஊருணி கேள்விக்குறியாகும் நீர்மட்டம்
ADDED : நவ 02, 2025 04:30 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மறைந்து வரும் ஊருணியால் கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.
இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் ஊராட்சியில் 6 ஏக்கர் பரப்பு கொண்ட மங்கல ஊருணி உள்ளது. ஒரு காலத்தில் இந்த ஊருணி தண்ணீர், அப்பகுதி சுற்று வட்டார மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கியது.
தற்போது இது பராமரிப்பு இல்லாமல் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் ஊருணி இருக்கும் இடமே தெரியாமல் உள்ளது. மேலும் தண்ணீர் வரும் வரத்து கால்வாய் இருந்த இடமே தெரியாமல் மண் மூடி போய்விட்டது. மழைக்காலங்களிலும் கூட ஊருணியில் தண்ணீர் இல்லாமல் புதர் மண்டியே காணப்படுகிறது.
வளர்ந்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி ஊருணியில் தண்ணீர் தேக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.