/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீட்டில் மூன்று நாட்களாக இறந்து கிடந்த முதியவர்
/
வீட்டில் மூன்று நாட்களாக இறந்து கிடந்த முதியவர்
ADDED : பிப் 20, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை சொர்ணநாதன் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் சாமியய்யா, 53. வாடகை வீட்டில் வசித்தார். இவர் 14 ஆண்டுகளாக மனைவி, குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவர் குடியிருந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அருகில் சாத்திக்கோட்டை கிராமத்தில் வசிக்கும் சாமியய்யா மூத்த சகோதரி விஜயாவுக்கு தகவல் தெரிவித்து வந்து பார்த்த போது சாமியய்யா இறந்து கிடந்தது தெரியவந்தது. விஜயா கொடுத்த புகாரில்
போலீசார் விசாரித்தனர். மூன்று நாட்களுக்கு மேல் ஆனதால் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை நடந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.