/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுண்ணாம்பிருப்பு வைகாசி திருவிழா
/
சுண்ணாம்பிருப்பு வைகாசி திருவிழா
ADDED : மே 23, 2025 11:48 PM

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் சுண்ணாம்பிருப்பில் தென்பாலை,கூத்தையனார் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
சுண்ணாம்பிருப்பு கிராமத்தில் வைகாசியில் தென்பாலை,கூத்தையனார்,கிளாவடி கருப்பர், வீரம்மா காளியம்மன் கோயில் திருவிழா நடைபெறும். விழாவை முன்னிட்டு நேற்று காலை. அழகிய விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து தென்பாலை கூத்த அய்யனார் கோயில் வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிேஷகம் நடந்தது. மாலையில் அழகிய விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தினர் பூத்தட்டுககளுடன் புறப்பட்டு படியான் கோயிலில் வைத்தனர். இன்று காலை படியான் கோயிலில் இருந்து பூத்தட்டுடன் புறப்பட்டு வீரம்மா காளி அம்மன் கோயிலுக்கு சென்று பூச்சொரிதல் விழா நடைபெறும்.