/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசிடம் குவிந்து கிடக்கும் தொழில் திட்டங்கள்; இளைஞர்களே தொழில் துவங்க முன்வாருங்கள்...
/
அரசிடம் குவிந்து கிடக்கும் தொழில் திட்டங்கள்; இளைஞர்களே தொழில் துவங்க முன்வாருங்கள்...
அரசிடம் குவிந்து கிடக்கும் தொழில் திட்டங்கள்; இளைஞர்களே தொழில் துவங்க முன்வாருங்கள்...
அரசிடம் குவிந்து கிடக்கும் தொழில் திட்டங்கள்; இளைஞர்களே தொழில் துவங்க முன்வாருங்கள்...
ADDED : அக் 01, 2025 10:18 AM

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள், தொழில் முனைவோர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் திட்டங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை அள்ளி பருகி நீங்களும் ஒரு தொழில் முனைவோராக வளர வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் விரும்பி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.
திட்டங்களின் விபரங்கள் கலைஞர் கைவினை திட்டம் இத்திட்டத்தில் கைவினைகள் 35 வயதிற்கு மேற்பட்ட 5 ஆண்டு அனுபவம் உள்ள 25 விதமான அடையாளம் காணப்பட்ட வர்த்தகம், புதிய அல்லது நவீன தொழில் நுட்ப தொழில் நிறுவனம் துவக்கலாம். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனம், மாவட்ட தொழில் மையம் மூலம் பயிற்சி, வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கி சந்தைபடுத்துதல் பணி மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படும். இக்கடனுக்கு கடன் மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியம் உண்டு. தேசிய வங்கிகளில் 5 சதவீதம், தாய்கோ வங்கியில் 2 சதவீத வட்டி மானியம் உண்டு. இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தது 35 வயதும் அதற்கு மேலும் இருக்கலாம்.
தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும். 25 விதமான கைவினை பொருட்கள் உற்பத்திக்கு குழு அமைத்து உதவி செய்யப்படும்.
புதிய தொழில் முனைவோர் தொழில் வளர்ச்சி திட்டம் (நீட்ஸ்) பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி படித்த முதல் பட்டதாரிகளுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கப்படும். உற்பத்தி மற்றும் சேவை திட்டங்களுக்கு குறைந்தது 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.1 கோடி வரை கடன் கிடைக்கும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை மானியம் உண்டு. மாநில அரசு வட்டி மானியம் 3 சதவீதம் தருகிறது.
தொழில் முனைவோர் பங்களிப்பாக பொது பிரிவினர் 10, சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் பங்களிப்பு வழங்க வேண்டும். பொது பிரிவினர் 21 முதல் 35, சிறப்பு பிரிவினர் 21 முதல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குறைந்தது பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். ஒரு மாதகால பயிற்சி வழங்கப்படும். இத்தொழில் முனைவோருக்கு சிட்கோவில் பிளாட் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அண்ணல் அம்பேத்கர் வர்த்தக சாம்பியன் (ஏ.ஏ.பி.சி.எஸ்.,) திட்டம் இதில் எஸ்.சி., எஸ்.டி.,க்களுக்கு மட்டுமே கடனுதவி உண்டு. திட்டத்திற்கு வரையறை இல்லை. அதே நேரம் மானியம் அதிகபட்சம் ரூ.1 கோடி வரை மட்டுமே வழங்கப்படும். முதலீட்டில் 35 சதவீதம் மானியம், அதிகபட்சம் ரூ.1.5 கோடி. வட்டி மானியம் 3 சதவீதம் உண்டு. அதிகபட்ச வயது 55. கல்வி தகுதி என்று எதுவம் இல்லை.
இதற்காக இரண்டு வாரம் பயிற்சி தரப்படும். உற்பத்தி, சேவை, வர்த்தக துறையில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,யை ஊக்குவிக்கும் திட்டம்.
பிரதமரின் வேலை (பி.எம்.இ.ஜி.பி.,) உருவாக்கும் திட்டம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தொழில் துவங்க வாய்ப்பு. இத்திட்டத்தை கே.வி.ஐ.சி., மாவட்ட தொழில் மையம், கயிறு வாரியம், வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும். புதிய தொழில் துவங்க திட்ட மதிப்பீடு ரூ.50 லட்சமும், உற்பத்தி தொழிலுக்கு ரூ.20 லட்சம், சேவை துறைக்கு ரூ.1 கோடி வரை. புதிய தொழில் முனைவோருக்கு திட்டமதிப்பீட்டில் 15 முதல் 35 சதவீதம் வரை மானியம்.
விளம்பரதாரர் பங்களிப்பு பொது பிரிவினர் 10, சிறப்பு பிரிவினர் 5 சதவீதம். இத்திட்டத்தில் தொழில் துவங்க குறைந்தது 18 வயது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் நோக்கம் புதிய குறுந்தொழில்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாகும்.
பிரதமரின் நுண்உணவு (பி.எம்.எப்.எம்.,இ) பதப்படுத்தும் நிறுவன திட்டம் நுண் உணவு பதப்படுத்தும் யூனிட், மகளிர் குழுவினர், கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்துதல். இதற்கென திட்ட மதிப்பீடு ஏதும் இல்லை. தனி நபருக்கு கடனுடன் இணைந்து 35 சதவீதம் மானியம், அதிகபட்சம் ரூ.10 லட்சம். குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கு 35 சதவீத மானியம், மகளிர் குழுவினரில் ஒரு பெண்ணின் முதலீடு தொகை ரூ.40 ஆயிரம் இருக்க வேண்டும்.
வர்த்தக நிறுவனங்களுக்கு 50 சதவீத மானியம் உண்டு. விளம்பரதாரர் பங்களிப்பு 10 சதவீதம். வயது 18 க்கு மேற்பட்டோர். எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்நிறுவனத்திற்கு மத்திய அரசின் முழு ஆதரவு வழங்கப்படும்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் (யு.ஒய்.இ.ஜி.பி.,) திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வணிகம் செய்வதற்கான திட்ட மதிப்பீடு ரூ.15 லட்சம். முதலீட்டு கடனில் 25 சதவீதம் வரை மானியம் உண்டு. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு பெண் தொழில் முனைவோர் அதிகாரமளிக்கும் (டி.டபுள்யூ.இ.இ.எஸ்.,) திட்டம் இத்திட்டத்தில் பெண்களுக்கு ஆன்லைனில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுக்குள் ரூ.1லட்சம் வருவாய் ஈட்டும் பெண்ணை உருவாக்குவதே நோக்கம்.
இது முற்றிலும் பெண்களுக்கான திட்டம். இதுபோன்ற தொழில் திட்டங்களில் வங்கி கடனுதவி பெற்று தொழில் துவங்க விரும்பும் தொழில் முனைவோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் அந்தந்த மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.