/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்குறளை மறந்த அமைச்சர்: உதயநிதி முன் அசடு வழிந்தார்
/
திருக்குறளை மறந்த அமைச்சர்: உதயநிதி முன் அசடு வழிந்தார்
திருக்குறளை மறந்த அமைச்சர்: உதயநிதி முன் அசடு வழிந்தார்
திருக்குறளை மறந்த அமைச்சர்: உதயநிதி முன் அசடு வழிந்தார்
ADDED : நவ 15, 2025 01:33 AM
காரைக்குடி: காரைக்குடியில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், திருக்குறளை கூற முயன்று முடியாததால், அதை 'ஸ்கிப்' செய்து தன் பேச்சை முடித்து, துணை முதல்வரை பார்த்து அசடுவழிந்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றார்.
இந்நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:
சைக் கிள், மாணவர்களின் பயணத்தை எளிதாக்குகிறது. பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்லலாம். நுரையீரல், இதயம் என, அனைத்து உறுப்புகளையும் சிறப்பா க்குகிறது. தமி ழகத்தில் உள்ள ஒரு கோடி இளைஞர்களை விளையாட்டு மைதானத்திற்கு வரவைத்து, வீரர்களாக மாற்றிய பெருமை துணை முதல்வர் உதயநிதியை சேரும். இந்தியாவில் எந்த மாநிலமும் நடத்த முடியாத அளவிற்கு, தமிழகத்தில் சர்வதேச போட்டிகளை நடத்தி காட்டியவர் துணை முதல்வர்.
ஒரு கோடியே, 15 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகையை கொண்டு சேர்த்தவர். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி வழங்கி, பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தியவர்.
ஒரு காலத்தில் தமிழகத்திலிருந்து ஏராளமான ஐ.பி.எஸ்., -- ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வந்தனர். கடந்த காலங்களில் அந்த எண்ணிக்கை குறைந்தது. இதற்காக, முதல்வர் ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கினார்.
இத்திட்டத்தை யாரிடம் ஒப்படைக்கலாம் என, திருவள்ளுவர் குறிப்பிட்டதை போல், ('இதனை இவன்' என்றவர், தொடர்ந்து சொல்ல முடியாமல்) அதன் அடிப்படையில் யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்து துணை முதல்வரிடம் ஒப்படைத்தார். இந்தாண்டு 87 பேர் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றனர்.
இவ்வாறு பேச்சை முடித்த அமைச்சர், துணை முதல்வரை பார்த்து அசடு வழிந்தார்.

