sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் அறிவித்த திட்ட்ங்கள் கிடப்பில்...

/

 சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் அறிவித்த திட்ட்ங்கள் கிடப்பில்...

 சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் அறிவித்த திட்ட்ங்கள் கிடப்பில்...

 சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் அறிவித்த திட்ட்ங்கள் கிடப்பில்...


ADDED : ஜூலை 27, 2025 12:12 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.169 கோடிக்கான திட்டங்கள் செயல்வடிவம் பெறாமல், பல மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சியின் போது, ராமநாதபுர மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு 1984 ம் ஆண்டு புதிய மாவட்டம் உருவானது. 1985ம் ஆண்டில் ஒரே இடத்தில் வட்ட வடிவில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் கட்டப்பட்டன.

இந்த கட்டடத்தை தொடர்ந்து பராமரிக்காமல் விட்டதால், 40 ஆண்டுகளான நிலையில் கலெக்டர் அலுவலக கட்டடம் முற்றிலும் சிதிலமடைந்து விட்டது.

கலெக்டர், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலக கட்டடங்கள் மட்டுமே அவ்வப்போது புனரமைக்கப்படுகிறது.

மற்றபடி இந்த வளாகத்தில் உள்ள வனத்துறை, கருவூலகம், கல்வித்துறை உள்ளிட்ட கட்டடங்கள் புனரமைக்காமல், கூரை இடிந்து ஊழியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே சிவகங்கையில் புதிதாக அனைத்து துறைகளை கொண்ட கலெக்டர் அலுவலக வளாகம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியான திருப்புத்துார் நகருக்குள் தஞ்சாவூர் - மதுரை, மதுரை - காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், பிற சரக்கு வாகனங்கள் வருவதால், நகருக்குள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க திருப்புத்துார் நகருக்கு வெளியே பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மாநகராட்சியான கல்வி நகர் காரைக்குடி பல ஆண்டாக கல்வி நகராக விளங்கி வரும் காரைக்குடி பெரிய நகராக வளர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 2024 ஆக., 10 ம் தேதி காரைக்குடி நகராட்சியுடன் கண்டனுார், கோட்டையூர் பேரூராட்சிகள், சங்கராபுரம், கோவிலுார், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூரில் (மானகிரி மட்டும்) ஆகிய ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தியது.

இதனால், காரைக்குடி மாநகராட்சி தரத்திற்கு ஏற்ப, மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளை அதிகரிக்கும் நோக்கில், மாநகராட்சி அலுவலகம், மாமன்ற கூட்ட அரங்கம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

முதல்வர் அறிவித்த ரூ.169 கோடி திட்டம் சிவகங்கை மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜன.,22 ம் தேதி சிவகங்கையில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், சிவகங்கையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட ரூ.89 கோடி, திருப்புத்துாரில் பைபாஸ் ரோட்டிற்கு ரூ.50 கோடி, காரைக்குடி மாநகராட்சி கட்டடத்திற்கு ரூ.30 கோடி என ரூ.169 கோடி ஒதுக்கி, விரைந்து பணிகள் துவக்கப்படும் என அறிவித்தார்.

முதல்வர் அறிவித்து 6 மாதங்களை கடந்த நிலையில், இது வரை இதற்கான பூர்வாங்க பணிகளோ, நிதி ஒதுக்கீடோ போன்ற எந்த அறிவிப்புகளும் இன்றி கிடப்பில் போடப் பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us