/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போராட்டத்திற்கு சென்ற ஆசிரியர்கள் மாற்றுப் பணிக்கு வந்த ஆசிரியர் மாணவர்கள் இல்லாமல் ஏமாற்றம்

ADDED : பிப் 16, 2024 05:16 AM

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள சாலி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாற்றுப் பணிக்கு வந்த ஆசிரியர் மாணவர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள ஓ சிறுவயல் ஊராட்சிக்கு உட்பட்ட சாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடந்தது. போராட்டத்திற்கு செல்வதாக கூறி, சாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் சென்றுள்ளனர்.
ஆசிரியர்கள் போராட்டத்திற்கு சென்றதால் சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலக அதிகாரிகள் பள்ளிக்கு மாற்றுப் பணி ஆசிரியரை அனுப்பியுள்ளனர்.
மாற்றுப் பணிக்காக ஆசிரியர் பள்ளிக்குச் சென்ற நிலையில் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் அந்த ஆசிரியர் ஏமாற்றமடைந்தார்.
சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் பரிமளம் கூறுகையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுமுறை என்று தெரிவித்து சென்றது குறித்து தெரியாது. பள்ளியில் சென்று விசாரித்தால் காரணம் தெரியும் என்றார்.