/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முயல் வேட்டைக்கு சென்ற இளைஞர்பன்றிக்கு வைத்த மின்வேலியில் பலி
/
முயல் வேட்டைக்கு சென்ற இளைஞர்பன்றிக்கு வைத்த மின்வேலியில் பலி
முயல் வேட்டைக்கு சென்ற இளைஞர்பன்றிக்கு வைத்த மின்வேலியில் பலி
முயல் வேட்டைக்கு சென்ற இளைஞர்பன்றிக்கு வைத்த மின்வேலியில் பலி
ADDED : பிப் 19, 2025 01:42 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம்காளையார்கோவில் மருதக்கண்மாய் ஜெபமாலை மகன் ராஜ் 60. இவர் மருதக்கண்மாயில் தனது நிலத்தில் கடலை பயிரிட்டுள்ளார்.
அடிக்கடி கடலை செடிகளை இரவில் பன்றிகள் சேதப்படுத்துவதால் வயலை சுற்றி கம்பிகளைக் கட்டி இரவு நேரங்களில் அதில் மின் இணைப்பு கொடுத்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக ஒட்டாணம் ரஞ்சித் 23 முயல் வேட்டைக்கு சென்றார். முயலை பிடித்து விட்டு மின் வேலியை தாண்ட முற்பட்ட போது காலில் மின் கம்பிபட்டு மின்சாரம் தாக்கி இறந்தார். நேற்று காலை 9:00 மணிக்கு ராஜ் வயலுக்கு சென்று பார்த்தபோது ரஞ்சித் இறந்து கிடப்பதை கண்டார். ரஞ்சித் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.