ADDED : பிப் 10, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை தலைமை வகித்தார். மாவட்ட நுாலகர் வெங்கடவேல் பாண்டி முன்னிலை வகித்தார்.
நுாலகர் முத்துக்குமார் வரவேற்றார். வாசகர் வட்ட நிர்வாகி பகீரதநாச்சியப்பன், மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், திட்ட உறுப்பினர்கள் ஈஸ்வரன், ரமேஷ் கண்ணன், ேஹமமாலினி, செல்லமணி, சேவுகன், சாஸ்தா சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட நுாலகத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டுவது. போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் இட வசதி செய்து தருவது என தீர்மானித்தனர். நுாலகர் கனகராஜ் நன்றி கூறினார்.