ADDED : செப் 25, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: நாமக்கல் மாவட்டம் காப்பி காயக்கண்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் கார்த்திகேயன் 41,டிரைவரான இவர் நாமக்கல்லிலிருந்து வாகனத்தில் ராமர், பெருமாள்,தொத்தன்,அர்ச்சுனன், சின்னச்சாமி ஆகியோருடன் தாயமங்கலத்திற்கு வந்துள்ளார்.
ஓட்டலில் உணவருந்தி விட்டு இரவு 10:00 மணிக்கு வி.ஏ.ஓ.,அலுவலகம் எதிரே உள்ள பொட்டலில் படுத்து துாங்கி உள்ளனர். காலையில் கார்த்திகேயனை மற்றவர்கள் எழுப்பிய போது எழுந்திருக்கவில்லை. அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.