தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குண்டும் குழியுமாக உள்ள ரோடு

குண்டும் குழியுமாக உள்ள ரோடு

குண்டும் குழியுமாக உள்ள ரோடு


ADDED : ஜூன் 23, 2025 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை : சிவகங்கை மேம்பாலத்தில் இருந்து ஆயுதப்படை குடியிருப்பு வரை செல்லக்கூடிய ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சிவகங்கை அருகே முத்து நகர், ஆயுதப்படை குடியிருப்பு, போக்குவரத்து நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். போக்குவரத்து நகர், முத்து நகரில் இருந்து சிவகங்கை செல்வதற்கு ஆயுதப்படை குடியிருப்பு வழியாக செல்லக்கூடிய ரோடு முழுவதும் சேதமடைந்து உள்ளது. இந்த ரோட்டை பயன்படுத்தி தான் ஞாயிற்றுக்கிழமை சந்தை, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் சென்று வருகின்றனர். அண்ணாமலை நகர், புதுப்பட்டி, ஏனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிவகங்கையில் உள்ள பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் தினமும் சைக்கிளில் இந்த ரோட்டை தான் பயன்படுத்துகின்றனர். இந்த ரோடு முற்றிலும் குண்டும் குழியுமாக இருப்பதால், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

///////

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us