/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாழடைந்த காளையார்கோவில் ஆய்வு மாளிகை; புதர் மண்டி கிடக்கும் கட்டடம்
/
பாழடைந்த காளையார்கோவில் ஆய்வு மாளிகை; புதர் மண்டி கிடக்கும் கட்டடம்
பாழடைந்த காளையார்கோவில் ஆய்வு மாளிகை; புதர் மண்டி கிடக்கும் கட்டடம்
பாழடைந்த காளையார்கோவில் ஆய்வு மாளிகை; புதர் மண்டி கிடக்கும் கட்டடம்
ADDED : மார் 14, 2024 11:37 PM

சிவகங்கை : காளையார்கோவிலில் 1947ல் கட்டிய பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை மற்றும் அலுவலர்கள் குடியிருப்பு பாழடைந்து காட்சி அளிக்கின்றன.
காளையார்கோவில் அரசு மருத்துவமனை அருகே கடந்த 1947ல் பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு மாளிகை கட்டப்பட்டது. இந்த மாளிகையில் உள்ள அறைகளில் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்க அனுமதி உண்டு. மேலும் இந்த ஆய்வு மாளிகையை விரிவுபடுத்தும் நோக்கில் இப்பகுதியில் பணிபுரியும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் இருவருக்கு குடியிருப்புகளை 1988ல் கட்டினர். சிவகங்கை, தேவகோட்டை பகுதியில் பணிபுரியும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் இங்கு குடும்பத்துடன் தங்கி கொள்ள, குடியிருப்பு கட்டப்பட்டன.
தொடர்ந்து இந்த ஆய்வு மாளிகை, அலுவலர்கள் குடியிருப்புகளை பொதுப்பணித்துறை நிர்வாகம் புனரமைப்பு செய்யாமல் விட்டுவிட்டது. இதனால், காலப்போக்கில் இந்த கட்டடங்கள் அனைத்தும் பாழடைந்த கட்டடம் போல் காட்சி அளிக்கின்றன.
ஆய்வு மாளிகை, குடியிருப்பை சுற்றிலும் செடி, கொடிகள் மண்டி விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. ஆய்வு மாளிகை நுழைவு வாயில் தரைத்தளம் பெயர்ந்து பள்ளமாக காட்சி அளிக்கின்றன.
மேலும் ஆய்வு மாளிகையை மறைக்கும் விதமாக, இரவு நேர கடைகள் ஆக்கிரமித்துள்ளன. பொதுப்பணித்துறையினர் இந்த ஆய்வு மாளிகையை புனரமைப்பு செய்து, ரோட்டோர ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.
தேவகோட்டை உதவி கோட்ட பொறியாளர் பாண்டியன் கூறியதாவது, ஆய்வு மாளிகை முன் கால்வாய் கட்டுவதற்காக ஊராட்சியில் பள்ளம் தோண்டி விட்டுவிட்டனர். அதே போன்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தாசில்தாரிடம் கோரிக்கை வைத்துள்ளோம், என்றார்.

