ADDED : ஆக 22, 2025 10:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மாணவர்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் பட்டுப்போன மரத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.
இப்பேரூராட்சியில் திண்டுக்கல்- காரைக்குடி நெடுஞ்சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாக சுற்றுச்சுவர் அருகே உள்ள மரம் பல மாதங்களாக பட்டுப்போய் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. உடைந்து விழும்போது ஒரு பக்கம் மாணவர்களுக்கு வகுப்பறையும் மற்றொரு பக்கம் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலையில் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.