ADDED : மார் 31, 2026 05:18 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரை அருகே வி.புதுக்குளம் அரசு ஆரம்பப் பள்ளி ஆண்டு விழா,தலைமை ஆசிரியர் பணி ஓய்வு,கற்றலில் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் அஸ்மிதா பானு தலைமை தாங்கினார். ஆசிரியை ஸ்டெல்லா அனிதா வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன் முன்னிலை வகித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ராஜை பாராட்டி பேசினார். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.
