ADDED : ஜூன் 17, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துா ர் ஆ.பி.அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மன்ற துவக்கம், 100 சதவீத தேர்ச்சிக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடந்தது.
தலைமையாசிரியர் பாரதிதாசன் தலைமை வகித்தார். ஆசிரியர் ரவீந்திரன், சர்மிளா, பள்ளி மேலாண்மைக்குழுத் துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர்.
சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ., தேசியக் கொடியை ஏற்றி தேர்ச்சி சதவிகிதம் உயர்த்திய ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். போதை ஓழிப்பு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கினார்.
என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
