/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாரம்பரிய சாலை பாழானது காரைக்குடியில் உருவான பள்ளம்
/
பாரம்பரிய சாலை பாழானது காரைக்குடியில் உருவான பள்ளம்
பாரம்பரிய சாலை பாழானது காரைக்குடியில் உருவான பள்ளம்
பாரம்பரிய சாலை பாழானது காரைக்குடியில் உருவான பள்ளம்
ADDED : ஏப் 13, 2025 07:16 AM

காரைக்குடி காரைக்குடி ரயில்வே பீடர் ரோடு 1931ம் ஆண்டு செட்டிநாட்டின் முறைப்படி அமைக்கப்பட்ட பழமையான சிமென்ட் சாலையாகும். 95 ஆண்டுகளை கடந்தும், தற்போது வரை சேதம் ஏற்படாமல் உள்ள இச்சாலை, பழமையான, பாரம்பரிய சாலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் உள்ளது.
இந்நிலையில், காரைக்குடி பாதாள சாக்கடை திட்டத்திற்காக, ரயில்வே திட்டப் பணிகளுக்காக பல இடங்களில் சிமென்ட் சாலை உடைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ. 13.57 கோடி மதிப்பீட்டில், லிப்ட், எஸ்கலேட்டர் இருக்கை, நுழைவாயில் பார்க்கிங் என புதுப்பொலிவுடன் அமைய உள்ளன. ஆனால் ரயில்வே ஸ்டேஷன் முன்பு உள்ள பாரம்பரிய சாலை பாதுகாக்கப்படவில்லை.
எனவே, ரயில்வே ஸ்டேஷன் முன்பு முற்றிலும் சேதமடைந்து போன சிமென்ட் சாலையை, மீண்டும் பராமரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

