/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பணி நிறைவு ஆசிரியரை பாராட்டிய கிராம மக்கள்
/
பணி நிறைவு ஆசிரியரை பாராட்டிய கிராம மக்கள்
ADDED : பிப் 29, 2024 11:54 PM

சிங்கம்புணரி, - சிறுமருதுார் அரசு நடு நிலைப் பள்ளியில் 2003ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் வெ.வனரோஜா. இவர் வரும் மே 31ம் தேதி பணி நிறைவு பெறுகிறார்.
இதையொட்டி பள்ளி சார்பில் நேற்று பணி நிறைவு பாராட்டு விழா வட்டாரக் கல்வி அலுவலர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது. ஆசிரியர் பால சுப்பிரமணியன் வரவேற்றார்.
அப்போது சிறுமருதுார் கிராம மக்கள் சேர்ந்து தலைமை ஆசிரியருக்கு சீர் கொடுத்து வாழ்த்தினர்.
பீரோ, சோபா, கண்ணாடி மேஜை, குத்துவிளக்கு, சேலை உள்ளிட்ட பொருட்களை ஆசிரியருக்கு சீராக வழங்கினர்.
விழாவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், வட்டார தலைவர் பொன் பால்துரை, ஆசிரியர்கள் வாழ்த்தி பேசினர்.

