/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்பாச்சேத்தியில் நேரடி நெல் விதைப்பு; பரம்பு அடிக்கும் பணி மும்முரம்
/
திருப்பாச்சேத்தியில் நேரடி நெல் விதைப்பு; பரம்பு அடிக்கும் பணி மும்முரம்
திருப்பாச்சேத்தியில் நேரடி நெல் விதைப்பு; பரம்பு அடிக்கும் பணி மும்முரம்
திருப்பாச்சேத்தியில் நேரடி நெல் விதைப்பு; பரம்பு அடிக்கும் பணி மும்முரம்
ADDED : அக் 02, 2025 11:42 PM

திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி பகுதியில் நேரடி விதைப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் பரம்பு அடிக்க உழவு மாடுகள் கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வைகை ஆறு பாயும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாற்றங்கால் அமைத்து ஒரு மாதத்திற்கு பின் நாற்று பறித்து நடவு செய்வது வழக்கம். கூலி ஆட்கள் தட்டுப்பாடு, சம்பள உயர்வால் இந்த ஆண்டு நாற்றங்கால் அமைக்காமல் நேரடி விதைப்பில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
இந்த வட்டாரத்தில் 3 ஆயிரம் எக்டேரில் என்.எல்.ஆர், கோ 50, 51, அண்ணா ஆர் 4, அட்சயா, ஐ.ஆர். 20 போன்ற நெல் ரகங்கள் பயிரிடுகின்றனர். ஒரு ஏக்கருக்கு நாற்றங்கால் அமைத்து அதன்பின் சம்பள ஆட்கள் வைத்து அதனை பறித்து நடவு செய்ய ரூ.12,000 வரை செலவாகிறது. வேலை உறுதி திட்டம், தீபாவளி பண்டிகை என்பதால் நெல் நடவுக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை.
இதனால் திருப்பாச்சேத்தியில் விவசாயிகள் நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். உழவு செய்த வயலில் பரம்பு அடித்து வயலை மட்டப்படுத்திய பின்தான் விதை நெல் தூவுவார்கள்.
விவசாயத்திற்கு ஆள் தட்டுப்பாடு இது குறித்து கொத்தங்குளம் பெரியசாமி கூறியதாவது, முதன் முறையாக நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ளேன். சம்பள ஆட்கள் கிடைக்கவில்லை. நாற்று பறிக்க, நடவு செய்ய ஏக்கருக்கு செலவு அதிகமாகிறது. பரம்பு அடிக்க உழவு மாடுகள் கிடைக்கவில்லை. பிரமனூரில் இருந்து ஏக்கருக்கு ரூ.1,000 வீதம் சம்பளம் பேசி அமைத்து வந்துள்ளேன் என்றார்.