/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி
ADDED : அக் 05, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தின் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பார்த்தபோது தோளில் பேக் அணிந்த படி தலை சிதறிய நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.
உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக போலீசார் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் திவாகர் 24 என்பவர் சென்னை செல்வதற்காக அதிகாலையில் பல்லவன் ரயிலில் சென்றபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.