ADDED : பிப் 21, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை,- தேவகோட்டை மெயின் ரோட்டில் ராம்நகரில் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில்முத்துக்கிருஷ்ணன் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடை பூட்டை உடைத்தவர்கள் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.65 ஆயிரத்தையும், அருகில் விக்னேஸ்வரன் நடத்திவரும் கம்ப்யூட்டர்,உதிரிபாகங்கள் கடையிலும், எதிரே ராஜாராம் நடத்திவரும் ஹோட்டல், மளிகை கடையிலும் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர்.
நான்கு கடைகளிலும் ரூ.80 ஆயிரம் மற்றும் சில பொருட்கள் திருடப்பட்டுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.