/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை
/
காரைக்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை
காரைக்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை
காரைக்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை
ADDED : பிப் 13, 2024 06:54 AM
காரைக்குடி : காரைக்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு காரைக்குடி மட்டுமின்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மாதத்திற்கு 200 முதல் 300க்கும் மேற்பட்ட பிரசவம் நடக்கிறது.
இங்கு ரூ.10.50 கோடி செலவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 50க்கும் செவிலியர்கள் பணியாற்றுகின்றனர்.
மகப்பேறு மருத்துவர் 3 பேர் இருக்க வேண்டிய நிலையில் 2 பேர் மட்டுமே உள்ளனர். மகப்பேறு மருத்துவ பணிக்காக வரும் டாக்டர்களும் இடமாற்றம்வாங்கி செல்கின்றனர். மகப்பேறு மருத்துவர்கள், கண் மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல், இருதய சிகிச்சை என எதற்கும் போதிய டாக்டர்கள் இல்லை.
இருதய பரிசோதனைக்காக எக்கோ ஸ்கேன் எடுக்க முடியாமல் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டைக்கு நோயாளிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. துப்புரவு பணியாளர் பணியிடமும் 20க்கும் மேல் காலியாக உள்ளது.
மாங்குடி எம்.எல்.ஏ., கூறுகையில், காரைக்குடியில் இரண்டு இடங்களில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இதனால் மருத்துவர்கள் இரு இடங்களில் பணியாற்ற வேண்டியுள்ளது. பழைய மருத்துவமனையை அங்கிருந்து அகற்றக் கூடாது.
ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும். புதிய தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள அனைத்து பிரிவுகளிலும் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததன் பேரில் நியமிப்பதாக தெரிவித்துள்ளனர்.