/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை: மாற்றுப்பணியாக வரும் பணியாளர்கள்
/
நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை: மாற்றுப்பணியாக வரும் பணியாளர்கள்
நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை: மாற்றுப்பணியாக வரும் பணியாளர்கள்
நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை: மாற்றுப்பணியாக வரும் பணியாளர்கள்
ADDED : ஜூலை 29, 2025 12:41 AM

மானாமதுரை பேரூராட்சி சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சியாக மாற்றப் பட்டது. 27 வார்டு களிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மானா மதுரை கீழ்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையில் மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
நகராட்சியாக மாற்றப் பட்டதை தொடர்ந்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள சர்வீஸ் ரோட்டில் ஜூன் மாதம் புதிதாக திறக்கப்பட்டது.
போதிய டாக்டர்கள், செவிலியர்கள், மருந் தாளுனர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப் படாததால் மாற்றுப் பணியில் அனைத்து பணி யாளர்களும் நியமனம் செய்யப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
புது பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் உள்ளதால் மானாமதுரை மேல்கரை பகுதி மக்களும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மருத்துவ சேவைக்காக இங்கு வந்து செல்கின்றனர். தினமும் 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் நிலையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் சூழ் நிலை ஏற்பட்டு வருகிறது.
நோயாளிகள் கூறிய தாவது:
மானாமதுரை கீழ்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து 4 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளதால் போதிய பஸ் வசதி இல்லாத நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்கு சிரமமாக இருந்தது. தற்போது புது பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்ட நிலையில் போதிய டாக்டர்கள், ஊழியர்கள் இல்லாததால் மருத்துவமனை இருந்தும் பயனில்லாமல் எங்கள் சிரமம் தொடர்கிறது.
மதுரை-ராமேஸ் வரம் நான்கு வழிச்சாலை யில் இம்மருத்துவமனை அமைந்துள்ளதால் அடிக்கடி இங்கு நடக்கும் விபத்து களில் சிக்கி காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் உயிர்பலி அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மானாமதுரை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலு வலர் மார்க்கண்டேயன் கூறியதாவது:
புதிதாக திறக்கப்பட்ட மானாமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான டாக்டர்கள், செவிலியர்கள், பணி யாளர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளதால் மாற்றுப் பணியில் 1 டாக்டர், 3 செவிலியர்கள், 1மருந்தாளுனர்,1 லேப் டெக்னீசியன் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு புதிதாக டாக் டர்கள், செவிலியர்கள் நியமனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நட வ டிக்கை எடுத்துவருகிறது. விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றார்.