/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாய நிலத்திற்கு செல்ல பாதை இல்லை; 15 ஆண்டுகளாக விவசாயிகள் போராடியும் பலனில்லை
/
விவசாய நிலத்திற்கு செல்ல பாதை இல்லை; 15 ஆண்டுகளாக விவசாயிகள் போராடியும் பலனில்லை
விவசாய நிலத்திற்கு செல்ல பாதை இல்லை; 15 ஆண்டுகளாக விவசாயிகள் போராடியும் பலனில்லை
விவசாய நிலத்திற்கு செல்ல பாதை இல்லை; 15 ஆண்டுகளாக விவசாயிகள் போராடியும் பலனில்லை
ADDED : ஜூலை 10, 2025 10:53 PM

கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செவரக்கோட்டை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இப்பகுதி மக்களின் தொழிலாக உள்ளது.
இங்குள்ள அத்தானிக் கண்மாய் அருகே 200 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. விவசாய நிலத்திற்கு செல்லும் வழி கண்மாய் வரத்து பாதையாகவும், குறுகிய பாதையாக உள்ளது. முன்பு, மாடுகள் வைத்து ஏர் பூட்டி விவசாயம் செய்ததால் விவசாயிகள் எளிமையாக பாதையை பயன்படுத்தினர்.
தற்போது டிராக்டர் மூலமே விவசாயம் நடைபெறுகிறது. குறுகிய பாதையாலும், சகதிக்காடாக இருப்பதால் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்வது சிரமம். இதனால் விவசாயப் பணி குறையத் தொடங்கியது. தற்போது 200 ஏக்கரும் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாக கிடக்கிறது. குறுகிய பாதையின் நடுவே பாலம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
சமூக ஆர்வலர் முருகேசன் கூறுகையில்:
பொதுப் பணித்துறைக்கு சொந்தமான அத்தானிக் கண்மாயை கடந்து தான், விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. நீர்வழிப் பாதையாகவும், குறுகிய பாதையாகவும் உள்ளதால் எந்த வாகனங்களும் செல்ல முடிவதில்லை. நீர்வழிப் பாதையின் நடுவே பாலம் அமைக்க 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல்வர் தனிப்பிரிவு என அனைவருக்கும் மனு அளித்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. 200 ஏக்கர் விவசாய நிலம் தரிசாக கிடக்கிறது. விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க அரசு முன் வர வேண்டும்.