/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் தைலக்காப்பு மகோத்ஸவம் பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாணம்
/
திருக்கோஷ்டியூரில் தைலக்காப்பு மகோத்ஸவம் பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாணம்
திருக்கோஷ்டியூரில் தைலக்காப்பு மகோத்ஸவம் பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாணம்
திருக்கோஷ்டியூரில் தைலக்காப்பு மகோத்ஸவம் பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாணம்
ADDED : ஜன 29, 2024 05:40 AM

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் தைலக்காப்பு மகோத்ஸவத்தை முன்னிட்டு பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் தை மாதம், பெருமாள் கோதை நாச்சியார் தைலக்காப்பு மகோத்ஸவ விழா ஜன., 23 ல் துவங்கியது. ஆண்டாள் தலைக்காப்பு மண்டபம் எழுந்தருளல், தைலம் திருவீதி வலம் வருதல், தைலம் சாத்துதல், ஆண்டாளுக்கு நவகலச அலங்காரம சவுரித் திருமஞ்சனம், நவகலை அலங்கார திருமஞ்சனம், ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவை, ஆண்டாள் முத்துக்குறிப் பார்த்தல் நடந்தது.
நிறைவு நாளன்று காலை 11:50 மணிக்கு உற்ஸவ பெருமாள் மாப்பிள்ளை அழைப்பாக' தங்கப் பல்லக்கில் கல்யாண மண்டபம் அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து பெரியாழ்வார் எதிர்கொள்ளல் நடந்தது. பின்னர் மாலை 5:00 மணிக்கு பெண் அழைப்பாக 'ஆண்டாள் சீர்வரிசையுடன் கோயிலை வலம் வந்து திருவீதி உலா வந்தார்.
ஆரத்தி எடுத்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் காணிக்கை வழங்கினர். பின்னர் ராஜகோபுரம் எதிரில் தீர்த்த மண்டபம் அருகில் ஆண்டாள், பெருமாள் ஊஞ்சல் மாலை மாற்றும் வைபவம் நடந்தது.
பின்னர் கோயிலுக்குள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழுங்க, பட்டாச்சாரியர்கள் மந்திரம் ஒலிக்க பெருமாளுக்கும், கோதைநாச்சியாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
தொடர்ந்து கோஷ்டி, தீர்த்தம், மரியாதை அளிக்கப்பட்டது. பாசுரம், வேதபாராயணம் நடந்தது. பின்னர் ஆண்டாள், பெருமாள் தங்கப்பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.