/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர் மகோத்ஸவம் நாளை திருக்கல்யாணம்
/
திருக்கோஷ்டியூர் மகோத்ஸவம் நாளை திருக்கல்யாணம்
ADDED : ஜன 26, 2024 05:32 AM

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று உச்சிக்கொண்டை அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். நாளை இரவு பெருமாளுக்கும் கோதை நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தையில் பெருமாள் கோதை நாச்சியார் தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸவம் 5 நாட்கள் நடைபெறும்.
ஜன.23 ல் ஆண்டாள் நாச்சியார் பெரிய சன்னதிக்கு எழுந்தருளி பெரிய பெருமாளிடம் பிரியாவிடை திருப்பாவை வியாக்யானம் நடைபெற்று மகோத்ஸவம் துவங்கியது.
மறுநாள் காலை ஆண்டாள் தலைக்காப்பு மண்டபம் எழுந்தருளி தைலம் திருவீதி வலம் வந்தது. பின்னர் தைலம் சாத்துதலும், ஆண்டாளுக்கு நவகலச அலங்கார ஸெளரித் திருமஞ்சனமும் நடந்தது.
நேற்று ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளி உச்சிக்கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.இன்று மாலை ஆண்டாள் முத்துக்குறி பார்த்தல் நடைபெறும்.
நாளை காலை 11:30 மணிக்கு மேல் பெருமாள் திருமண மண்டபம் எழுந்தருளி பெரியாழ்வாரை எதிர்கொள்ளலும், மாலை 4:30 மணிக்கு ஆண்டாள் சீர்வரிசையுடன் திருவீதி உலாவும், தொடர்ந்து ஊஞ்சலில் மாலை மாற்றுதலும் நடைபெறும்.
பின்னர் இரவில் 7:26 மணிக்கு மேல் பெருமாளுக்கும் கோதைநாச்சியாருக்கும் திருக்கல்யாணம் நடந்து திருவீதி புறப்பாடு நடைபெறும். மகோத்ஸவமும் நடைபெறும்.

