/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் இரவில் தொடரும் வழிப்பறி
/
திருப்புவனத்தில் இரவில் தொடரும் வழிப்பறி
ADDED : ஜன 25, 2024 05:17 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் இரவு நேரத்தில் சிலர் பொதுமக்களை வழிமறித்து தாக்கி கொள்ளையடிப்பதால் பொதுமக்கள் நடமாட அச்சமடைந்துள்ளனர்.
திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகரில் வசிக்கும் பலரும் மதுரை நகரில் மேற்படிப்பிற்காகவும் அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பணிபுரிகின்றனர். நகரில் வசிக்கும் பெண்கள் பலரும் மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து இரவு வீடு திரும்புகின்றனர். இரவு பத்து மணிக்கு மேல் பஸ்சை விட்டு இறங்கி வீடுகளுக்கு செல்ல முடியவில்லை, டூவீலரில் வரும் கும்பல் வழிமறித்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்று விடுகின்றனர்.
கடந்த வாரம் பிரசவத்திற்காக அரசு மருத்தவமனையில் அனுமதித்திருந்த நிலையில் டீ வாங்க அதிகாலை 12:00 மணிக்கு வந்த பெண்ணை வழிமறித்து பணம், அலைபேசியை பறித்து சென்று விட்டனர். இரு நாட்கள் கழித்து பஸ்சை விட்டு இறங்கி பெற்றோர் வரவுக்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த மாணவி ஒருவரை ரவுடிகள் கத்தியை காட்டி மிரட்டி பணம் , அலைபேசியை பறித்த போது பெற்றோர் வரவே தப்பியோடி விட்டனர். தொடர்ந்து இது போன்ற சம்பவங்களால் இரவு பத்து மணிக்கு மேல் நகரில் யாருமே நடமாடவே முடியவில்லை.