/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இரவில் ஆயுதங்களுடன் கும்பல் திருப்பாச்சேத்தி மக்கள் அச்சம்
/
இரவில் ஆயுதங்களுடன் கும்பல் திருப்பாச்சேத்தி மக்கள் அச்சம்
இரவில் ஆயுதங்களுடன் கும்பல் திருப்பாச்சேத்தி மக்கள் அச்சம்
இரவில் ஆயுதங்களுடன் கும்பல் திருப்பாச்சேத்தி மக்கள் அச்சம்
ADDED : ஆக 22, 2025 10:01 PM
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியில் கடந்த சில நாட்களாக இரவில் கும்பல் ஒன்று கையில் ஆயுதங்களுடன் வலம் வருவதால் கிராமமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பாச்சேத்தியை சுற்றிலும் ஆவரங்காடு, மாரநாடு, கானுார், டி.வேளாங்குளம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் தங்களது தேவைக்கு திருப்பாச்சேத்தி வந்து செல்கின்றனர்.
இங்கு இரவு நேரத்தில் கையில் ஆயுதங்களுடன் மர்ம கும்பல் வலம் வருகிறது. ரோடு, வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டுள்ள டூவீலர், கார், வேன், லாரி உள்ளிட்டவற்றில் பெட்ரோல், டீசல், பேட்டரிகளை திருடுகின்றனர். சப்தம் கேட்டு வருபவர்களை கையில் வாளை காட்டி மிரட்டுகின்றனர்.
திருப்பாச்சேத்தியை சுற்றிலும் விவசாயம் அதிகளவு செய்யப்படுகிறது. மதுரை, திருப்புவனத்திற்கு விவசாய பொருட்களை விற்பனைக்கு வேன், டிராக்டரில் கொண்டு செல்வது வழக்கம், இதற்காக வாகனங்களை வீட்டு வாசலில் தான் நிறுத்தியிருப்பார்கள், அடிக்கடி வாகனங்களில் பேட்டரி, டீசல் திருடு போவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் இரவில் ஆயுதங்களுடன் வலம் வருபவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.