/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வடிகால் வசதி இல்லாத திருப்புத்துார்
/
வடிகால் வசதி இல்லாத திருப்புத்துார்
ADDED : செப் 18, 2025 05:51 AM
திருப்புத்துார், : திருப்புத்துார் ரோடுகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க வடிகால் வசதியை மேம்படுத்த பொதுமக்கள் கோரி யுள்ளனர்.
திருப்புத்துாரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. ஒன்றரை மணி நேரம் பெய்த மழையில் பல இடங்களில் மழைநீர் வேகமாக வடிய முடியாமல் தேங்கின. குறிப்பாக பெரியகடை வீதியில் மழை நீர் தேங்கி மக்கள் நடமாட முடியாமல் தவித்தனர். அப்பகுதியிலும், காந்தி சிலை பகுதியிலும் இருந்த பழைய வடிகால் சிதைந்து விட்டன.
புதிய வடிகால்கள் அமைக்கப்பட்டன. ஆனால் விரைவாக மழைநீர் வடிவதில்லை. இதனால் காந்திசிலை பகுதியில் சந்திப்பு ரோடுகளில் வடிகால் வசதி ஏற்படுத்த பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல் மதுரை ரோட்டில் இந்தியன் வங்கி அருகில் மழை நீர் தேங்குகிறது. அப்பகுதியிலும் மழைநீர் வடியும் வகையில் முழுமையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.