தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் குப்பைக்கு தீ வைப்பு மூச்சுதிணறலால் அவதி

 திருப்புவனம் குப்பைக்கு தீ வைப்பு மூச்சுதிணறலால் அவதி

 திருப்புவனம் குப்பைக்கு தீ வைப்பு மூச்சுதிணறலால் அவதி


ADDED : பிப் 16, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனத்தில் நகர் முழுவதும் பல இடங்களில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி தீவைப்பதால் அடர்த்தியான புகை கிளம்பி மூச்சு திணறலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்புவனத்தில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினசரி வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் தினசரி சேகரித்து அதனை தரம் பிரித்து அழிக்க வேண்டும்.

திருப்புவனத்தில் தினசரி 6 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இது தவிர திருவிழா, திருமண காலங்களில் குப்பைகள் இருமடங்காக உயரும்.

திருப்புவனத்தில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை பாக்யாநகர் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டி தரம் பிரித்து அழிக்கின்றனர். ஆனால் தொடர் கண்காணிப்பு இன்றி குப்பைகளை தரம் பிரிக்காமல் அப்படியே கொட்டி வைத்துள்ளனர்.

கடந்த 4 ஆண்டாக மேலாக குப்பைகள் அகற்றப்படாததால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கிறது. இந்த குப்பையில் பேரூராட்சி ஊழியர்கள் தீவைத்து விடுகின்றனர்.

இதனால் ரோட்டில் செல்பவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us