/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் அரசு கட்டடங்கள் பார் ஆக மாறும் அவல நிலை
/
திருப்புவனம் அரசு கட்டடங்கள் பார் ஆக மாறும் அவல நிலை
திருப்புவனம் அரசு கட்டடங்கள் பார் ஆக மாறும் அவல நிலை
திருப்புவனம் அரசு கட்டடங்கள் பார் ஆக மாறும் அவல நிலை
ADDED : அக் 13, 2025 05:35 AM

திருப்புவனம் : திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அரசு கட்டடங்கள், பராமரிப்பில்லாத கட்ட டங்களை குடிமகன்கள் பார் ஆக பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன இக்கிராமங்களில் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், வி.ஏ.ஓ., அலுவலகங்கள், இ சேவை மையங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளன. இக்கட்டடங்களுக்கு சுற்றுச்சுவர்கள் ஏதும் இருப்பதில்லை.
எனவே குடி மகன்கள் பலரும் இக்கட்டட வளாகத்தில் அமர்ந்து கூட்டம் கூட்டமாக மது அருந்துவது கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் ஏழு இடங்களில் அரசுடாஸ்மாக் மது பான கடைகள், இரண்டு எலைட் பார்கள் செயல்படுகின்றன. அரசு மதுபான கடைகளில் மது வாங்குவோர் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.
இதுதவிர கிராமப்புறங்களில் பெட்டி கடைகளில் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகின்றன.
கிராமங்களில் தங்கு தடையின்றி மதுபான வகைகள் கிடைப்பதால் அரசு கட்டங்களில் அமர்ந்து மது அருந்துவதுடன் அங்கே வரும் பொதுமக்களையும் அவதூறாக பேசுகின்றனர்.
கழுகேர்கடை ஊராட்சியில் பெருமாள்புரத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்ததால் அருகில் உள்ள இ - சேவை மைய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
சேதமடைந்த கட்டடத்தை பாதுகாப்பாக பூட்டி வைக்காததால் குடி மகன்கள் அதனை பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.
கட்டடம் முழுவதும் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பேப்பர்கள், கவர்கள் உள்ளிட்டவைகள் காணப்படுகிறது. எனவே பழைய கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும்.