ADDED : ஜன 01, 2025 07:37 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் நடந்த திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா ஆண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி பாராட்டு சான்றுகளை வழங்கினார்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டு நிறைவு பெற்றதை யொட்டி வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டது. சிவகங்கையில் டிச.,23 முதல் 31 வரை இவ்விழா கொண்டாடப்பட்டது. இதில் திருக்குறள் வினாடி வினா போட்டி, கருத்தரங்கு, ஓவிய போட்டிகள், புத்தக கண்காட்சி நடந்தது.
வெள்ளிவிழா நிறைவு
நேற்று வெள்ளிவிழா நிறைவு விழா நடந்தது. மாவட்ட மைய நுாலகர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் திருஞானசம்பந்தம், முதல் நிலை நுாலகர் வெங்கடவேல்பாண்டி முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி பரிசு மற்றும் சான்றுகளை வழங்கினார்.
இதில் பேச்சு போட்டியில் முதலிடம் சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி மாணவி நித்திய சாய் சேனா, 2ம் பரிசு புனித ஜஸ்டின் பள்ளி ஜெர்லின்ஜெரோபியா, 3ம் பரிசு மன்னர் மேல்நிலை பள்ளி
கல்யாண் பெற்றனர்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் அரசு மேல்நிலை பள்ளி ராகவன், 2ம் பரிசு ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி மாணவி நவிராநாச்சியார், மூன்றாம் பரிசு அரு.நடேசன் செட்டியார் பள்ளி அருண் பெற்றனர்.
வினாடி வினா போட்டியில் முதலிடம் காஞ்சிரங்கால் ஒன்றிய நடுநிலை பள்ளி எழில்மதி, சேக் செரீப், இரண்டாம் பரிசு சாம்பவிகா மேல்நிலை பள்ளி மாணவிகள் ஹரிணிகா, தனுஸ்ரீ, மூன்றாம் பரிசு அரசு மேல்நிலை பள்ளி விஷ்ணு, பிரதிவிராஜ் பெற்றனர்.
விழாவில் நுால் சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், எழுத்தாளர் ஈஸ்வரன், நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன், நுாலக வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை, மன்னர் மேல்நிலை பள்ளிதலைமை ஆசிரியர் சுந்தரராஜன், நுாலக நண்பர்கள் திட்டம் ரமேஷ் கண்ணா, தமிழ்கனல், ஆசிரியர் மாலா பங்கேற்றனர். மைய நுாலகர் கனகராஜன் நன்றி கூறினார்.