/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வரகுணேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா
/
வரகுணேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா
ADDED : ஜூன் 24, 2024 01:46 AM
சாலைகிராமம் : சாலைக்கிராமம் திருக்காமகோடீஸ்வரி சமேத வரகுணேஸ்வரர் கோயிலில் அருணகிரிநாதர் குருபூஜை, திருவாசக முற்றோதல் விழா நடைபெற்றது.ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் அருணகிரிநாதர் சுவாமி முக்தியடைந்த நாளன்று குரு பூஜை விழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.இதை முன்னிட்டு சாலைகிராமம் வரகுணேஸ்வரர் கோயிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை, அஸ்டோத்திர நாமாவளி பூஜைகள் நடைபெற்றது.
அருணகிரிநாதர், கிருபானந்த வாரியார், முருகேச சுவாமிகளின் திருஉருவப்படம் கோயிலில் இருந்து புறப்பட்டு திருவீதி உலா நடந்தது. திருக்கழுக்குன்றம் தாமோதரனின் திருவாசக முற்றோதல் நடைபெற்றது.இதில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டை அருணகிரிநாதர் பக்த சபை, திருச்செந்தூர் பாதயாத்திரை குழு, இளையான்குடி மாற நாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்தனர்.