ADDED : ஜூலை 22, 2026 11:37 PM

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சில நாட்களாக பலருடைய அலைபேசிக்கு சி.பி.ஐ., பாகிஸ்தான் என வாட்ஸ்அப் காலில் அழைக்கும் நபர்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி பணம் பறிக்க முயல்கின்றனர்.
திருப்புவனத்தில் சில நாட்களாக வாட்ஸ் அப் காலில் அழைக்கும் நபர்கள் நாங்கள் சி.பி.ஐ., அதிகாரிகள். பாகிஸ்தானில் இருந்து நீங்கள் பணம் பெற்றுள்ளீர்கள். எனவே உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என கூறி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர்.
பொதுமக்கள் இது போன்ற மோசடி அழைப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது, சைபர் கிரைமில் வித விதமான குற்றங்கள் பதிவாகி வரும் நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தங்களது அலைபேசிகளை பயன்படுத்துவதே நல்லது, தற்போது அலைபேசி மூலமாகவே அனைத்து வித பணப்பரிமாற்றமும் நடந்து வருவதால் இழந்த பணத்தை மீட்பது பெரும் சவாலாகவே இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
