ADDED : பிப் 19, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மாணவர்களுக்கும், பள்ளி கட்டடத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வளர்ந்துள்ள மரத்தை அகற்ற பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் ஊராட்சி சிலநீர்பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி அருகே உள்ள பாழடைந்த சமுதாயக்கிணறு ஓரத்தில் மரம் உள்ளது. இம்மரம் கிணற்றின் பக்கவாட்டு சுவர் அருகே வேர்களின் பிடியில்லாமல் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மரம் சாய்ந்து பள்ளி கட்டடம் மீதும், மின் கம்பி மீதும் விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான இந்த மரத்தை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வேறு இடத்தில் கூடுதல் மரக்கன்றுகளை நட பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
