ADDED : ஏப் 23, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : கானாடுகாத்தானில் மாடுகள் அடிக்கடி திருடு போனது.
அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி மக்களே கண்காணித்து வந்துள்ளனர். வயல்களில் மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது, சிலர் மாடுகளைப் பிடித்து சரக்கு வாகனத்தில் ஏற்ற முயன்றுள்ளனர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அம்மூவரையும் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரித்தபோது திருட்டில் ஈடுபட்டது திருமயத்தை சேர்ந்த லோகேஸ்வரன் 20, அரவிந்த் 23, முகர்ஜி 19 என தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

