/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீட்டு வாசலில் வெட்டு வழக்கில் மூவர் கைது
/
வீட்டு வாசலில் வெட்டு வழக்கில் மூவர் கைது
ADDED : செப் 20, 2024 06:53 AM
தேவகோட்டை: தேவகோட்டை அருகே மருதவயலைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் 60., தேவகோட்டை ராம்நகர் 3வது தெருவில் வசிக்கிறார். இரு தினங்களுக்கு முன் சுப்பிரமணியன் வீட்டு வாசலில் நின்ற போது டூவீலரில் வந்த ஒருவர் வெட்டி விட்டு தப்பி விட்டார். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தேடினர்.
வெட்டுப்பட்ட சுப்பிரமணியனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கோவனியை சேர்ந்த அந்தோணி என்ற பிச்சைக்கும் இடம் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னையில் முன்விரோதம் இருந்தது.
விசாரணையில் முன்விரோதம் காரணமாக அந்தோணி தனது நண்பரான தேவகோட்டை அருகே நல்லாங்குடியில் வசிக்கும் கருப்பையா வளர்ப்பு மகன் 17 வயது சிறுவனை துாண்டிவிட்டதோடு, வீட்டையும் அடையாளம் காட்டியுள்ளார்.
அந்த சிறுவன் சுப்பிரமணியனை வெட்டியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அந்தோணி 50., சிறுவன்மற்றும் அடைக்கலம் கொடுத்த கார்த்திக் 33., அவரது தந்தை கருப்பையா 60., முத்தையா 38., ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட சிறுவன் உட்பட கார்த்திக், முத்தையா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.