ADDED : செப் 28, 2026 04:52 PM
திருப்புத்துார்,செப்.29-
திருப்புத்துார் ஒன்றியம் காரையூர் சிங்கம்புணரி ரோட்டில் உள்ள சாய்பாபா கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் மற்றும் 9 ஜோடி பெரிய கொலுசு திருடப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெறும். தினசரி காலை 7:00 மணிக்கு நடை திறந்து நான்கு கால பூஜை நடைபெறும். நேற்று காலை பூஜாரி செந்தில்நாதன் கோயில் முன் கதவை திறந்து உள்ளே சென்ற போது, உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததும், மூன்று பீரோக்கள் திறக்கப்பட்டும் இருந்தது. உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணம், பீரோவில் இருந்த 9 ஜோடி வெள்ளிக் கொலுசு திருடு போனது தெரிந்தது. கடந்த 9 மாதங்களாக உண்டியல் திறக்கப்படாத நிலையில் திருட்டு நடந்துள்ளது.
கண்டவராயன்பட்டி போலீசார் விசாரித்தனர்.விசாரணையில் உண்டியல்,கதவு,பீரோ உடைக்க பயன்படுத்திய கடப்பாரை,கரண்டியை கைப்பற்றி தடயவியல் சோதனை நடத்தினர். மோப்ப நாய் சோதனையும் நடந்தது. கோயில் சிலை அருகில் இருந்த வெண்கல குத்துவிளக்கு,சூடத்தட்டில் இருந்த பணம் திருடு போகாதது தெரியவந்துள்ளது.
