/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் இடி மின்னலுடன் மழை 7 வீடுகள் சேதம், பசு பலி
/
சிவகங்கையில் இடி மின்னலுடன் மழை 7 வீடுகள் சேதம், பசு பலி
சிவகங்கையில் இடி மின்னலுடன் மழை 7 வீடுகள் சேதம், பசு பலி
சிவகங்கையில் இடி மின்னலுடன் மழை 7 வீடுகள் சேதம், பசு பலி
ADDED : நவ 20, 2024 06:56 AM

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக இடி மின்னலுடன் பெய்து வரும் பலத்த மழைக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 வீடுகள் சேதம், பசு மாடு பலியானது.
மாவட்டத்தில் செப்., கடைசியில் இருந்தே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக காரைக்குடி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஆங்காங்கே வீடுகள் பகுதி, முழுமையாக சேதமடைந்து வந்தது. தேவகோட்டை, காரைக்குடி, திருப்புவனம் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கியது. கடந்த மாதம் முழுவதும் மழையால் கடும் பாதிப்பை மக்கள் சந்தித்து வந்தனர்.
அதற்கு பின் சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் இம்மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வருகிறது. குறிப்பாக சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.
பசு மாடு பலி, 7 வீடுகள் சேதம்
நவ., 17 அன்று மாலை இடி மின்னலுடன் இளையான்குடியில் பலத்த மழை பெய்தது. இதில், வடக்கு சாலைக்கிராமத்தை சேர்ந்த விவசாயி மாயழகு என்பவரது பசு மாடு மின்னல் தாக்கி பலியானது.
அதே போன்று சிவகங்கை அருகே மட்டாகுளம் முத்துராமன், ஒக்கூர் புதுார் காளிமுத்து, கருத்தன்பட்டி நாச்சியப்பன், சாலைக்கிராமம் அருகே தேவசமுத்திரம் ராஜரத்தினம், பஞ்சனுார் பாப்பாத்தி ஆகியோரின் ஓட்டு வீடுகள் ஒரு பகுதியாக சேதமானது.
அதே போன்று காரைக்குடி அருகே மித்ராவயல் மீனாட்சி, நடராஜநகர் தேவகி ஆகியோரின் ஓட்டு வீடுகள் முழுமையாக சேதமானது. வீடுகளை இழந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.