ADDED : டிச 10, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 2500 எக்டேர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மிளகாய் செடிகள் பயிரிடப்பட்டு 30 முதல் 45 நாட்கள் ஆன நிலையில் தற்போது மழை, குளிர்ச்சியான காலம் என்பதால் பச்சைப்புழு மற்றும் இலை சுருட்டை போன்ற பூச்சி தாக்குதல்மிளகாய் செடிகளில் அதிகளவில் தென்படும்.
ஆகவே இதனை கட்டுப்படுத்த விவசாயிகள்ஈமாமெக்டின் பென்சயோட் 4 கிராம் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஏக்கருக்கு 100 லிட்டர் என்ற அளவில் 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்குமாறு தோட்டக்கலை துறையினர் தெரிவிக்கின்றனர்.

